வெள்ளிக்கிழமை பிரதேச சபையில் திரண்ட பொத்துவில் PVL kk அமைப்பின் உறுப்பினர்கள்


சமந்த போக்கில் ஈடுபட்ட தகாத வார்த்தையால் மரியாதைக்குறைவாக பேசிய அதிகாரியை அலுவலகத்தில் வைத்து சுட்டிக்காட்டவேண்டும் என்ற அடிப்படையில் அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளரோடு நேரடி ஒன்று கூடலை கட்டிட கேட்போர் கூட மண்டபத்தில் ஒழுங்கு செய்து அந்த அதிகாரியின் அசமந்த போக்கினால் இடம்பெற்ற பாதிப்புக்கள், பாரதூரமான விடயங்கள் என பலதையும் சுட்டிக்காட்டி
இவரை நீங்கள் அடக்காவிட்டால் எங்கள் மக்கள் வீதிக்கு இறங்கி அடக்குவார்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்களும் பாவிக்கப்பட்டன.

எனவே இவரை இவரின் தகாத வார்த்தைப்
பிரயோகத்தால் மக்கள் மனதை காயப்படுத்தும் அதிகார வெறி பிடித்த தொணியை நீங்களே கட்டுக்குள் கொண்டுவாருங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக இளைஞர்களின் சமூக சேவைகளை வரவேற்பு செய்து அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோம்.

எங்களுக்கு வேலை பார்க்கவே இவர்களுக்கு அரசு எங்கள் மூலமாக வரிப்பணத்தை பெற்று கொடுக்கிறது என்பதை மறந்து செயற்படுகின்றனர்.
எனவே இதனை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது உங்கள் பொறுப்பு என PVL kk அமைப்பு சார்பாக செயலாளரிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

அதற்கு செயலாளர்,
"இடம்பெற்ற தவறுகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்கள் சமூகப்பணி இன்னும் விஸ்தரிக்கப்
படவேண்டும் அதற்காக இந்த பிரதேச சபை எப்போது
வேண்டுமென்றாலும் உதவ தயராக இருக்கிறது. அதோடு நீங்கள் சுட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை எதிர்வரும் தினத்தில் செய்து முடிக்க நான் நடவடிக்கை எடுக்கிறேன்". என்று செயலாளர் மிகப்பணிவாக நடந்துகொண்டதால்
சமூகத்துக்கான PVL kk அமைப்பின் அதிர்வுப் பயணம் வெற்றியை கிட்டியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -