சிதம்பரபுரம், கற்குளத்தில் வறிய குடும்பத்திற்கு வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் நிதியுதவி-


வுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர்.

இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இப்பணம் நேற்று (23.06.2017) மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அலுவலகத்தில் வைத்து திருமதி. சி. சிவபாக்கியம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் தேசிய அமைப்பாளர் திரு. த.யோகராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -