ஞானசார கைது செய்யாத DIG க்கு, ஆப்பு வழங்கிய அரசு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய தவறிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு திடீர் பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வை.ஆர்.டப்ள்யூ.விஜேகுணவர்தனவுக்கே இந்த பதவி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல்-தம்புள்ளை வீதியில் வைத்து ஞான சார தேரரை கைது செய்வதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.இருப்பினும் குருணாகலில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளாமல் கொழும்பு நோக்கி தன் வழியில் சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் உதவி சேவை அதிகாரியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -