தனது மத்திய கிழக்கு விஜயத்தினையடுத்தே அரபு நாடுகள் கட்டார் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து தனிமைப்படுத்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
ஈரானுடன் இணைந்து பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் கட்டார் பங்களிப்பதாகவும் இதன் பின்னணியிலேயே தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம் மீது ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் கட்டார் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.