இலங்கையின் கிழக்கிலங்கை வர்த்தக ஏற்றுமதி அபிவிருத்தி சபை கட்டாருக்கு ஆதரவு

புனித நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றிமனிதநேயமற்ற முறையில் புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு இலங்கையின் கிழக்கிலங்கை வர்த்தக ஏற்றுமதி அபிவிருத்திசபை மனிதநேய அடிப்படையில் தங்களது ஆதரவை அழிப்பதாகவும் இச்செயற்பாட்டினால் கத்தார் நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்காலிகஉணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டனைத் தொடர்ந்து கட்டாரில் உணவு தட்டுப்பாடு நீங்கும் வரை இலங்கையிலிருந்து காய்கறி,பழங்கள் உட்பட தேவையான சகல பொருட்களையும் உடனடியாக அனுப்பி வைக்க ஆயத்தமாக இருப்பதாகவும் இதன் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் அவர்கள் தெரிவித்தார் 

உலகின் முதற்தர செல்வந்த நாடான கட்டாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை எனவும் கட்டாருக்கானஇராஜதந்திர தொடர்பு­களை துண்டிப்பதானது நீதியற்ற செயற்பாடு எனவும் தெரிவித்ததார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவுதி அரேபியாவிற்கான அண்மைய விஜயத்தைத் தொடர்ந்தே கட்டாரைத்தனிமைப்படுத்தும் இந்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன இது உலகமுஸ்லிங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வெளிப்படையான முயற்ச்சியாகும் எனவும் தெரிவிதததார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -