மட்டக்களப்பில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

'போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்' 'ஊhயடடநபெநள யனெ ஐஅpழசவயnஉந ழக ஐவெயபெiடிடந ஊரடவரசயட ர்நசவையபந in வiஅநள ழக றுயச யனெ Pழளவ றுயச' என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜுன் 15ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமாகும் இந்த ஆராய்ச்சி மாநாடு 18 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான கலாசார ஊடாட்ட யாத்திரையுடன் நிறைவு பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் இந்த 3 நாள் நிகழ்வுகளில் 'உலகமயமாக்கற் சூழலில் பாரம்பரியக் கலைகள்' என்ற கடந்த வருட உலக ஆராய்ச்சி மாநாட்டின் தொனிப்பொருளின் தொடர்ச்சியாகவும், மிகவும் புதியதும், கவனத்திற்குரியமான விடயத்தில் இந்த வருட மாநாடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அறிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்;கள், பத்திரிகையாளர்கள், ஆய்வு மாணவர்கள், தொழில் வினைஞர்கள் இணைந்ததான தொடர் செயற்பாடுகள், உரையாடல்களின் தொடர்ச்சியாகவும், மதீப்பீட்டுக்கும் முன்னோக்கிய செயற்படுகைக்குமான பெரும் சந்திப்பாகவும் ஆய்வுகளும், ஆய்வு அமர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்குச் சமாந்தரமாக மரபு ரீதியான ஆராய்ச்சி மாநாட்டுப் பொறிமுறையூடாகவும் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு இணைப்பாளர்களின் மூலம் ஆய்வாளர்கள் தொடர்புபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட உரையாடல்களுடன் ஆய்வு அமர்வுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மாநாடு ஆய்வுச் செயற்பாடு தனிமனிதப் பயணமுமல்ல ஆவணப்படுத்தலுடன் மட்டுப்படுவதுமல்ல அது ஊடாட்டங்களினூடான சமூக மையச் செயற்பாடு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் நிகழ்கிறது.

அடுத்த கட்ட முன்னெடுப்பிற்கான மதிப்பீடுகளையும், மறுமதிப்பீடுகளையும் செய்து கொள்வதற்கும்; தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், புதிதாக ஏற்படுத்திக் கொள்வதற்குமான சந்திப்பாக இம்மாநாடு அமைகின்றது.' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -