றிஷாத்தின் பாராளுமன்ற உரை! அமைச்சரவையில் இன்று தாக்கம்

ஏ.எச். எம். பூமுதீன்-

முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான இனவாத அட்டூழியங்களை கண்டித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தாக்கத்தை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் உணர முடிந்துள்ளதாக அறியவருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதி தலைமையில் வாராந்த அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, வெளிநாட்டு அமைச்சர் ரவி கருணாநாயக்க- மதங்களுக்கிடையில் இன நல்லுறவை பாதிக்கும் சம்பவங்கள் , நாட்டின் இஸ்திர தண்மைக்கு ஆபத்தானது. மக்களின் பாதுகாப்புக்கும் இந்த நிலை உகந்ததல்ல.

எந்த மதத்தினர் என்றாலும் அடுத்த மதத்தினருக்கு இடையூறு ஏட்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இது நாட்டினது வெளி உறவுக்கும் பாதிப்பை ஏட்படுத்தும் .

இதனை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பொதுவான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இது தொடர்பில் கருத்து வெளிப்படுத்திய அமைச்சர் மங்கள சமரவீர- முஸ்லிம்கள் இந்தளவுக்கு பொறுமையாக இருப்பது பெரிய விடயம். அவர்களின் பொறுமையை சோதிக்காமல் இனவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

வழமைக்கு மாறாக பல சிங்கள சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் - அமைச்சரவை பத்திரத்துக்கு ஆதரவாகவும் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும் கருத்து வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜனாதிபதி செயலக தகவல்களின் படி, இனவாதத்தை துடைத்தெறிய வேண்டும் என பல பெரும்பான்மை இன அமைச்சர்கள் கருத்து வெளிப்படுத்திய கூட்டமாக இன்றெய அமைச்சரவை கூட்டத்தையே பார்க்க முடிந்ததாக சுட்டிக்காட்டினர்.

அத்துடன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் அண்மையில் ஆற்றிய உரையின் எதிரொலியாகவே இந்த அமைச்சரவை பாத்திரத்தையும் சிங்கள அமைச்சர்களின் இனவாதத்துக்கு எதிரான கருத்தையும் பார்க்க முடிவதாகவும் தகவல் வெளிப்படுத்திய அதிகாரிகள் கோடிட்டு காட்டினர்.

இறுதியில் உரையாற்றிய ஜனாதிபதி, இதனை அரசுதான் செய்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது எனக்கூறியபோது- விமல் வீரவன்சவும் அப்பிடித்தான் கூறுகின்றார் என சில அமைச்சர்கள் அப்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

உண்மையில் - அமைச்சர் ரவியின் இன்றய அமைச்சரவை பாத்திரம் அதி முக்கியத்துவம் மிக்கது மட்டுமன்றி , முஸ்லிம்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடியதும் ஆகும்.

அதேநேரம் , இந்த பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதட்கும்-அமைச்சர் மங்கள அவ்வாறு கருத்து வெளிப்படுத்துவதட்கும் - வழமைக்கு மாறாக இனவாத சிந்தனை கொண்ட சிங்கள அமைச்சர்கள், இனவாதத்துக்கு எதிராக கருத்துக் கூறுவதட்கும் கால்கோளாக - அமைச்சர் றிஷாத்தின் பாராளுமன்ற உரையே காரணம் என்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகளின் கருத்தையும் இங்கு நாம் மறுதலிக்கவே முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -