பொதுபலசேனாவுக்கு நாட்டை விட பணம்தான் முக்கியம்..!

பொதுபலசேனா நோர்வேயின் கைக்கூலி, அதனை மஹிந்த அறிந்து கொள்ளாமல் மோட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்று அன்றே அஸாத்சாலி அவர்கள் கூறிவிட்டார்...!

நாங்கள் சென்ற காலங்களில், பொதுபலசேனா என்பவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? இவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்தி எது என்று கூறி ஒரு கட்டுரை வரைந்திருந்தோம் நீங்களும் அதனை பார்வையிட்டிருப்பீர்கள்.

அந்த கட்டுரைக்கு ஆதாரமாக மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கௌரவ அஸாத்சாலி அவர்கள் வீரகேசரி நாளிதலுக்கு வீடியோ மூலமாக ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் குறிப்பிடும் விடயங்களை நாம் இந்த விடயத்துக்கு ஆதாரமாக கொள்ளலாம், காரணம் அவர் மஹிந்த அரசுக்கு எதிராக செயல்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட பேட்டியாக அது இருப்பதனாலாகும்.

அந்த பேட்டியிலே பொதுபலசேனா அமைப்பு நோர்வேயின் அனுசரணையோடுதான் இயங்குகின்றது என்றும், ராஜித சேனாரத்ன நோர்வேயிக்கு சென்ற சமயம் (இவர் எதற்கு சென்றார் என்பது வேறுவிடயம்) இந்த பொதுபலசேனாக்காரர்கள் அங்கே இருந்ததை கண்டதாக தன்னிடம் ராஜித கூறியதாக கூறியுள்ளார்.

அதே நேரம் இந்த ஞானசார நோர்வே தூதராலயத்தில் இருந்து அந்த நாட்டின் தூதுவரோடு வெளியாகி வந்ததை தான் இரு கண்களாலும் கண்டதாகவும் அஸாத்சாலி அவர்கள் அந்த பேட்டியிலே குறிப்பிட்டிருந்தார். அவரது பேட்டியின் கருத்தை ஆழமாக நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் இவர்கள் யார் என்ற விடத்துக்கு நாம் வரலாம்.

இந்த நோர்வே கடந்த காலங்களில் புலிகளின் விடயத்தில் எப்படி செயல்பட்டார்கள் என்பது உலகமே அறிந்த விடயமாகும், இவர்களின் நோக்கம் அந்த விடயத்தில் தோல்வி கண்டதன் பிற்பாடு இந்த பொதுபலசேனே அமைப்பினரை பயன்படுத்தி தங்களின் திட்டங்களை இங்கே நிறைவேற்றி வருகின்றார்கள்.

அவர்களின் முதல் நோக்கம் மஹிந்தவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றுவது,
அடுத்தது முஸ்லிம் நாடுகள் மஹிந்தவுக்கு வழங்கும் ஆதரவை தடுத்து நிறுத்துவது, இதற்காக முஸ்லிம்களின் உணர்ச்சியை குத்தகைக்கு எடுப்பது, பொது பல சேனைவை இதற்கு பயன்படுத்துவது, என்ற கோட்பாடுகளே இந்த நோர்வேயினதும் மேற்குலக நாடுகளினதும் திட்டமாகும்.

இதற்காகத்தான் முஸ்லிம் மக்களையும் குழப்பி அதன் மூலம் ஐ.நா சபையில் மஹிந்தவுக்கு சார்பாக இயங்கும் முஸ்லிம் நாடுகளை, மஹிந்தவுக்கு எதிராக இயங்க வைப்பது அதன் காரணமாக ஐ.நா சபையில் மஹிந்த தோல்வியை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த பொதுபல சேனாவுக்கு காசை அள்ளிக்கொடுத்து இயக்குகின்றார்கள் என்றும் அஸாத்சாலி அவர்கள் கூறிவிட்டு.

இந்த விடயத்தை அறிந்து கொள்ளாமல் மஹிந்தவும் கோட்டாவும் மோடத்தனமாக இவர்களுக்கு சப்போட் பண்ணுகின்றானுகள் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அது மட்டுமல்ல நோர்வேயின் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த பொதுபல சேனாவினர் ராஜித சேனாரத்னவுடனும் கலந்துரையாடியுள்ளனர், அது மட்டுமல்ல ரவி கருணாநாயக்கவுடனும் அவர்கள் பேசியுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இந்த விடயம் தெளிவான ஒரு கருத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது, அது என்னவென்றால் இந்த பொதுபலசேனா அமைப்பினர் நோர்வையின் கைக்கூலி என்பதுவேயாகும்.

நோர்வே தமிழ் புலிகளின் மீது கரிசனை கொண்டவர்கள் அதே நேரம் ரணில் அவர்களுடனும் கடந்த காலங்களில் நண்பர்களாக செயல்பட்டும் வருகின்றவர்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த நோர்வே இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டங்களை நாசுக்காக செயல்படுத்திவருக்கின்ற ஒரு நயவஞ்சக நாடாகும்.

இஸ்ரவேல் நாட்டை அங்கீகாரம் செய்வதற்கு யசீர் அரபாத்தை மூலைச்சலவை செய்து ஆசைகாட்டி மோசம் செய்வதில் முன்னுக்கு நின்றவர்கள்தான் இந்த நோர்வே நாட்டுக்காரர்கள்.
இவர்கள் ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் முஸ்லிம் நாடுகளைக் கொண்டு இஸ்ரவேல் நாட்டை அங்கீகரிக்க வைத்துவிட்டு பின்னாலில் ஒன்றும் தெறியாத வபா மாதிரி நடந்து கொண்டவிடயத்தை உலகமே அறியும்.
அது மட்டுமல்ல யசீர் அரபாத்தின் மரணத்திலும் சதியை நிலைநாட்டிவிட்டு, பலஸ்த்தீன மக்களை இன்றும் துயரத்தில் ஆழ்த்திவிட்ட பெருமை இந்த நோர்வே நாட்டைத்தான் சேரும்.

இப்படிப்பட்ட நோர்வே இலங்கை விடயத்திலும் மூக்கை நுழைத்தபோதும் அதிலே படுதோல்வியைத்தான் கண்டார்கள், அதற்கு காரணமான மஹிந்தவை அவர்கள் நண்பர்களாக சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை.
அதே போன்று மேற்குலக நாடுகளையும் மஹிந்தவுக்கு எதிராக செயல்படவைக்கவும், ஐ.நா சபையில் மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவரவும், டயஸ்போராக்களை வளர்த்துவிடவும் கங்கணம் கட்டி நிற்கின்ற நாடுகளில் நோர்வேயும் ஒன்றாகும்.

அந்த நோர்வியின் செயல்திட்டத்தில்தான் இந்த பொதுபலசேனா இன்றும் இயங்கிக்கொண்டு வருகின்றது. இலங்கையில் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கும் இவர்கள்தான் காரணம் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

இலங்கையில் ஆட்சிமாற்றத்தை யார் யார் விரும்பினார்களோ அவர்கள் அனைபேரும் இதற்கு பின்னால் ரகசியமாக ஒன்றுபட்டு செயல்பட்டவர்கள்தான் என்பதும் தெறிந்தவிடயம்தான்.

இந்த பொதுபலசேனா அமைப்பு நாட்டுப்பற்று உள்ளவர்கள் என்று சொன்னால் உண்மையிலேயே அவர்கள் எதிர்க்கவேண்டியவர்கள், இலங்கை நாட்டின் ஒற்றையாட்சிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் தமிழ் தரப்பையும், நாடு கடந்த தமிழீல பாரளுமன்றத்தை அமெரிக்காவில் வைத்து இயக்கும் டயஸ்போராக்களையும், இந்த ஐ.நா சபையையும்தான், ஆனால் நாட்டுக்கு விசுவாசமாக இருந்துவரும் முஸ்லிம்களை ஏன் குறிவைத்து தாக்குகின்றார்கள் என்று ஆழமாக நாம் சிந்தித்து பார்த்தால் பல உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.

இந்த பொதுபலசேனா அமைப்பு அடிக்கடி நோர்வேயிக்கும் அமெரிக்காவுக்கும் சென்று வந்ததை நான் கவணியாது விட்டது, நான் செய்த தவறுதான் என்று மஹிந்த பகிரங்கமாகவே கூறிவருகின்றார், (பக்கத்திலிருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு எதிரியாக மாறியவரையே இனம்காணாதவர்)

ஆகவே இந்த பொதுபலசேனா என்ற அமைப்பு நோர்வேயின் கூலிப்படைகள் என்பது தெளிவாகின்ற போதும், சங்கிலி பிண்ணல் போன்று இதற்கு பின்னால் பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதுவும்,
இன்று இஸ்ரேல் நாடு இலங்கைக்குள் சர்வசாதாரணமாக வந்து உலாவுகின்றார்கள் என்ற விடயமும், அவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் எப்படி செயல்பட்டுக் கொண்டுவருபவர்கள் என்பதெல்லாம் யாரும் அறியாத ஒன்றல்ல.

ஆகவே...மேற்குலகம் கொண்டுவந்த இந்த நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து கொண்டுவருகின்றன அதனை இந்த அரசாங்கம் கண்டு கொண்டதாகவே தெறியவில்லை, இதற்கெல்லாம் காரணம் யார் என்று நமது முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்கும் நிலையிலும் இல்லை, அப்படித்தான் படித்தவர்கள் இதனை அறிந்திருந்தாலும் மக்கள் மத்தியில் சொல்லுவதற்கும் தயார் இல்லாத சூழ்நிலைதான் காணப்படுகின்றது.

வெறுமனே ஞானசாராவை மட்டும் குற்றம்காண்பதை விட்டுவிட்டு இவர்களை பின்னாலிருந்து இயக்கும் சதிகாரர்களை நாம் இனம்காண முயற்சிக்கவேண்டும்.

ஆகவே, முஸ்லிம் மக்கள் உணர்ச்சிவசப்படாமல், நமக்கு எதிராக நடக்கும் சதிகளை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை அலட்சியப்படுத்தாமல் சிந்திக்க முன்வரவேண்டும் என்பதே எங்கள் அவாவாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -