இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வாதத்திற்கு கட்டார் நிதி உதவி -பொது­ப­ல­சே­னா

ட்டார் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வரு­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் முறை­யிட்டு வந்­தமை இன்று உறு­தி­யாகி விட்­டது.

கட்­டா­ரி­லி­ருந்து பெறப்­பட்ட பணம் தீவி­ர­வா­தத்­துக்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், முன்னாள் ஜனா­தி­ப­திக்கு கட்­டா­ரி­யி­லி­ருந்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மூலம் கிடைத்து வரும் நிதி உதவி பற்றி விளக்­க­மாக கடிதம் ஒன்று எழு­தி­யி­ருந்தோம்.

வில்­பத்து குடி­யேற்­றங்கள் பற்றி முறை­யிட்­டி­ருந்தோம். இந்த நிதி­யு­தவி உடன்­ப­டிக்­கையில் அர­சாங்கம் கையொப்­ப­மி­ட­வில்லை. நிதி­யு­தவி அர­சாங்­கத்தின் ஊடாக வழங்­கப்­ப­ட­வு­மில்லை. வில்­பத்­து­வுடன் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரே கையொப்­ப­மிட்டார்.அந்த அமைச்சர் மஹிந்­த­ரா­ஜபக் ஷ காலத்தில் வகித்த அதே அமைச்சுப் பத­வி­யையே தற்­போ­தைய அர­சிலும் வகிக்­கிறார்.

கட்டார் உலக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பது இப்போது உறுதியாகி விட்டது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -