ஹம்ஸா கலீல்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வந்த காத்தான்குடி கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) முதற்கட்ட 1 கிலோ மீற்றர் வீதிக்கான காபட் இடும் பணிகள் இன்றுடன் (07) நிறைவடைந்தன.
சுமார் 2 கோடி 96 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிட்டப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) எதிர்வரும் (28.06.2017) புதன்கிழமை அன்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகப் பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. இக் கையளிப்பு நிகழ்வின் பின் கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) முன்றலில் "சமகால அரசியலும் எதிர்கால முஸ்லிம்களின் நிலைப்பாடும்" எனும் தலைப்பிலான மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வும் இடம்பெற இருப்பது-குறிப்பிடத்தக்கது.