மந்தபோஷாக்கினை ஒழிக்க பசுக்கன்று வழங்கல்- மட்டக்களப்பில்
ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்- 

ட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மேற்கு பிரதேசத்திலுள்ள மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் கரவைப் பசுக்கன்றுகளை வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கிரான் பாரதி கிராமத்திலுள்ள குடும்பங்களுக்கு கரவைப் பசுக்கன்றுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வேள்ட் விஷன் லங்கா கிரான் பிராந்திய திட்ட இணைப்பாளர் ஜேஆர் அகிலானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் முகாமையாளர் ஹிந்து றோஹாஸ் மற்றும் கிராம சேவை அதிகாரி எஸ். நந்தினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விதவைகள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், தீராத நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களைக்கொண்ட குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்படும் பசுக்கன்றுகள் வளர்ந்து ஈணும் (நாகு) பசு இன கன்றுகளை வாழ்வதாரம் குறைந்த ஏனைய குடும்பங்களுக்கு தத்தெடுக்க வழங்குவதன்மூலம் ஏனைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்தும் விசேட திட்டம் இதுவென கருதப்படுகிறது.

மக்களது வருமானத்தை அதிகரித்தல் , மந்தபோஷாக்கினை ஒழித்தல் மற்றும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதும் இத்திட்டத்தின் நோக்கமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -