அஸாத் சாலியின் சகோதரிக்கு பொதுபல சேனா அடைக்களம் வழங்கியது உண்மையா என இன்று ஊடகவியளாலர் ஒருவர் அவரிடம் இன்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்து பேசிய டிலந்த விதானகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து அவர் ..
இந்த விடயம் தொடர்பில் நாம் எங்கும் கூறி இதுவரை எங்கும் கூறவில்லை. மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்கள் சந்தித்த போது அங்கு அவரிடம் சில முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.அதன் பின்னரே இந்த விடயம் ஊடகங்களுக்கு வந்துள்ளன.
ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு ஞானசார தேரர் என்னை தொடர்பு அஸாத் சாலியின் சகோதரி எனக்கூறிக்கொண்டு ஒரு பெண் வந்திருப்பதாகவும்.விடயமாக பார்க்கும் படியும் பணித்தார்.
தனது கணவன் மகனுடன் வந்த குறித்த பெண் தான் ஆஸாத் சாலியின் சகோதரி எனவும் தனது சகோதர்களினால் தான் கடன் பிரச்சினையில் சிக்கி அனாதரவாகியுள்ளதாகவும் குடும்பத்தினரும் தன்னை ஒதுக்கிவைத்துள்ளதாகவும் கூறினார்.
மேலதிக விபரங்களை கேட்டுக்கொண்ட நான் ஞானாசார தேரரை தொடர்பு கொண்டு என்ன செய்வது என கேட்டபோது உதவி கேட்டு வந்துவிட்டதால் கட்டாயம் உதவுமாறு அவர் பணித்தார் .
இந்த விடயம் தொடர்பில் நான் அசாத் சாலிக்கு எஸ் எம் எஸ் மூலம் அறிவித்தேன் அவர் நன்றி என மட்டும் பதில் அளித்திருந்தார்.
குறித்த பெண்ணும் அவரது கணவர் மகன் எங்களுடையே வீட்டில் 2 மாதங்கள் தங்கியிருந்தனர்.இவர்கள் தொடர்பில் எமது அயலவர்களுக்கு சந்தேகம் வழுத்ததை உணர்ந்துகொண்ட நான் அவர்களை எனது செல்லுமாறு பணித்தேன்.
அவர் என் வீட்டில் தங்கியிருந்தமை பிறகு எனக்கு பிரச்சினையாகிவிடக்கூடாது எந்த நோக்கில் நான் சில வீடியோ ஆதாரங்களை வைத்துள்ளேன்.
அண்மையில் குறித்த பெண்மணி தற்போது புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் எங்களிடம் நிதி திரட்டித்தரும்படியும் கேட்டார்.
அவரது நோய் தொடர்பிலும் அதற்கு நிதி உதவி செய்யும்படியும் நான் தனிப்பட்ட ரீதியில் சில முஸ்லிம் நண்பர்களிடம் கோரினேன்.
நாம் அவர்களுக்கு செய்த உதவிக்காக புத்த மதத்தை தழுவிக்கொள்ளவா எனக்கூட அஸாத் சாலியின் சகோதரி எங்களிடம் கேட்டார்.இந்த விடயங்களை வைத்து நாம் அஸாத் சாலிக்கு சேறு பூசவிரும்பவில்லை நாம் அவரது சகோதரிக்கு மனிதாபிமான அடிப்படையிலேயே உதவினோம் என டிலந்த விதானகே குறிப்பிட்டார்.(மடவள )