பத்திரிகையாளர் சந்திப்பில் சாய்ந்தமருது ஷுறா சபையின் செயலாளர்-

எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன் -

ல ஆண்டுகளாக சாய்ந்தமருதில் இயங்கிய தெற்கு கிராமாட்சி சபையை இழந்தது போன்று, வைத்தியாசாலையையும் பிறிதொரு வைத்தியசாலையுடன் இணைத்துவிட்டு அதனையும் இழக்க தாங்கள் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்று, ஷுறா சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் அழுத்தமாகத் தெரிவித்தார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையை இணைத்து, அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாகவும், குறித்த செயற்பாடுகள் சாய்ந்தமருதின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்பதாலும் அந்த செயற்பாட்டுக்கு எதிரான தங்களது கருத்துக்களை பத்திரிகையாளர்களுக்கு தெளிவுபடுத்தும், பத்திரிகையாளர் சந்திப்பு சாய்ந்தமருது பலநோக்கு கூட்டறவுச் சங்க கட்டிடத்தில் 2017-06-28 ஆம் திகதி ஷுறா சபையின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் ஷுறா சபையின் உயர்சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே எம்.ஐ.எம்.சதாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக சாய்ந்தமருது மக்கள் தங்களை தாங்களே ஆள்வதற்கான உள்ளுராட்சிசபையைக் கோரிநிற்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் அதற்காக உள்ள வளங்களில் ஒன்றாக சாய்ந்தமருது வைத்தியசாலையும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த வைத்தியசாலையை பிறிதொரு வைத்தியசாலையுடன் இணைக்க எடுக்கப்படும் முயற்சி சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், சாய்ந்தமருதின் அடையாளங்களை அழிக்க எடுக்கும் முயற்சியாக ஷுறா சபை கருதுவதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்திசெய்ய விரும்புபவர்கள் கிழக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரினால் முன்மொழியப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள தளவைத்தியசாலை என்ற அந்தஸ்த்தை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுப்பதனூடாக சாய்ந்தமருது மக்களுக்கு உதவ முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தங்களது கருத்துக்களை மீறி சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை. என்றும் அதற்கு எதிராக வீதியில் இறங்கிபோராடவும் தயாராகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வைத்தியசாலை விடயம்போன்று சாய்ந்தமருதின் ஏனைய விடயங்களிலும் ஷுறா சபை மிகுந்த கரிசனை செலுத்தி வருவதாகவும் வட்டார எல்லைப் பிரிப்பில் கூட இந்த ஊரின் பெயர் குறிப்பிடப்படாது புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்கள், அபிவிருத்தி விடயங்களை பிற்படுத்தி கட்சிகளின் முன்னேற்றத்துக்கு முதன்மையளிப்பாகாகவும் கவலையுடன் இங்கு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்செய்க் எம்.ஐ.ஆதம்பாவா, சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.சலீம் (ஷர்கி), ஷுறா சபையின் உபதலைவர் எம்.ஐ.ஜப்பார் மற்றும் ஷுறா சபையின் சார்பில் எஸ்.எம்.கலீல் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -