பொலிசாரை முட்டிபோட வைத்த அதிகாரி -வைரலாக பரவியுள்ள வீடியோ

யுர்பன்ஜ் : ஒடிசா மாநிலத்தில் மயுர்பன்ஜ் மாவட்ட காவல் நிலையத்தில் பணி நேரத்தில் சீருடை அணியாத பெண் அதிகாரி உட்பட நான்கு போலீசாருக்கு முட்டிபோடும் தண்டனை அளித்த இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நான்கு போலீசாரும் பாவல் நிலையத்தின் முன் மண்டியிட்டுள்ளனர்.

இவர்கள் அன்றைய தினம் பணியில் இருந்தபோது சீருடை அணியாததால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. காவல் துறை சார்பில் அதிகாரிகள் அனைவருக்கும் போலீஸ் சீருடை வழங்கப்படுகிறது, மேலும் பணியின் போது சீருடை அணிவது கட்டாயம் ஆகும்.

ஒழுங்கு நடவடிக்கையாக சீருடை அணியாத நான்கு போலீசாரும் இரண்டு நிமிடங்களுக்கு மண்டியிட உத்தரவிடப்பட்டதாக இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கமளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவலர்கள் பிரிவு தலைவர் பி.கே. பெஹரா தெரிவித்துள்ளார். 

இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் விதமாகவும், இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க போலீஸ் ஆய்வாளர் அசோக் குமார் சேதியை பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என ஒடிசா மாநில காவலாளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.(தினகரன்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -