ஹைபிரிட் நீதிமன்றுக்கும் எக்ஸ்பிரஸ் பிணைக்கும் ஞானசார தேரர் வழக்கு முன்மாதிரி -பா உ காஞ்சன கிண்டல்

ஹைபிரிட் நீதிமன்றுக்கும் எக்ஸ்பிரஸ் பிணைக்கும் ஞானசார தேரர் வழக்கு முன்மாதிரி ; பா உ காஞ்சன கிண்டல் ஹைபிரிட் நீதிமன்றுக்கும் எக்ஸ்பிரஸ் பிணைக்கும் ஞானசார தேரர் வழக்கு முன்மாதிரி ; பா உ காஞ்சன கிண்டல்
ஞானசார தேரருக்கு பிணை வழங்கிய வேகத்தில் மற்றைய வழக்குகளைவும் விசாரணை செய்தால் இந்த நாட்டில்தேங்கிக்கிடக்கும் வழக்குகளை ஓரிரு நாட்களுக்குள் முடித்துவிடலாம் என மாத்தறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சி ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து கூறிய அவர்..

எமது நாட்டில் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் செல்பவர்கள் இன்று நாளே நீதிமன்றில் முடிந்து விட்டது எனசொல்ல நாம்கேட்டுள்ளோம்.அது தவிர பல வழக்குகள் வருடக்கணக்கில் நிலுவையில் உள்ளதாக சட்டத்தரணிகளும்நீதி அமைச்சர்களும் சொல்ல நாம் கேட்டுள்ளோம்.

நிலமை இவ்வாறு இருக்க வரலாற்றில் முதல்முறையாக ஞானசார தேரருக்கு ஹைபிரிட் நீதிமன்ற ஸ்டைலில்எக்ஸ்ப்ரஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதே முறையில் நீதிமன்ற செய்ற்பாடுகளை அமைத்துக்கொண்டால் நிலுவையில் உள்ள சகல வழக்குகளையும் ஓரிரு நாட்களுக்குள் முடித்துவிடலாம் என பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -