முழு முஸ்லீம்கள் மீதும் அதிருப்தியை ஏற்படுத்திய காடையர்களை கைது செய்யவும்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
டந்த 2017.05.29 அன்று மணற்சேனை பெருவெளிப்பகுதியில் உள்ள மூன்று சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டின் மூலமாக அப்பகுதியில் கட்டட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மீது அபாண்டத்தை சுமத்தி கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் இதுவரைக்கும் உண்மை நிலையறிந்தும் விடுவிக்கப்படாமை கவலையளிக்கிறது.

நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தையும் குற்றம்சாட்டிய காடையர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இதனால் தோப்பூர் பகுதியில் அன்றைய தினம் பதற்றமான சூழ்நிலையையையும் நாசகாரவேலைகளையும் செய்யத்துணிந்த அந்த காடையர்களை பொலிஸார் கைது செய்யவேண்டும் செய்யாத குற்றத்துக்காக சிறையிலிடப்படுவது எந்தவகையில் எமக்கான நியாயம் அநியாயமாக முஸ்லீம்களை குறிவைத்து சேறுபூச நினைக்கும் சில காட்டுமிராண்டித்தனமான வேலைகளுக்கு இடம்கொடுக்க ஒருபோதும் விடக்கூடாது.துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள் அடையாள அணிவகுப்பின் மூலபாக முஸ்லீம் இளைஞர்களை இனம்காட்டவில்லை இது முஸ்லீம்களுக்கான திட்டமிடப்பட்ட சதியாக இருந்து கொண்டிருக்கிறது எமது சமூகத்துக்காக உயிரையும் தியாகம் செய்து குடும்ப பொறுப்புக்களையும் சுமந்த இளைஞர்களை குறிவைத்துதநாடகத்தை அரங்கேற்றுகின்ற இனவாதத்தைத்தையும்தமிழ் முஸ்லீம்களுக்கிடையில் பீதியையும் உண்டாக்கும் தீவிர சக்திகளை இந்நாட்டில் இல்லாதொழிக்க இந்த ந்லாட்சி என்று சொல்லுகின்ற நரியாட்சி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் முஸ்லீம்களை ஏமாற்றவும் பகடைக்காய்களாக நினைக்கவேண்டாம் .கடுமையான சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் கலவரத்தை உண்டுபண்ணுகின்ற உண்டுபண்ண நினைக்கின்றவர்களை பொலிஸார் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் இதனையிட்டு வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பதையும் ஒட்டுமொத்த முஸ்லீம்களையும்கலசங்கடத்திற்கு உள்ளாக்க முனையவேண்டாம்.

எனவேதான்இவ்விவவகாரம் தொடர்பில் எமது முஸ்லீம் இளைஞர்கள் உடனடிமாக விடுவிக்கப்பட்டு இதனுடன் தொடர்புபட்டவர்களை அந்த காடையர்களை கைதுசெய்ய துரித நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -