மூதூர் துஷ்பிரயோக சம்பவம் : முஸ்லிம்கள் மீது வீன்பழி சுமத்த வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்



ஏ.எஸ்.எம்.தாணீஸ், எம்.என்.எம்.புஹாரி,எஸ்.எல் நௌபர்-

மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பெருவெளிப்பகுதியில் மூன்று பாடசாலைச்சிறுமிகள் கடந்த 2017.05.29 ஆந் திகதி சிறுவர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அப்பிரதேச தமிழ் மக்கள் அப்பகுதியில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமுஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்ட முற்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவிளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து கண்டண ஆர்ப்பாட்டமும் பேரணியும் பூரண கர்தாலும் கடையடைப்பு என்பனவும் தோப்பூரில் புதன்கிழமை 07 இடம்பெற்றது.

இதனை மூதூர் - தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன இவ் ஆர்பாட்டமும் கண்டணப்பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோப்பூர் பிரதான சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகி நடைபவனியாக நான்கு கிலோமீற்றர்கள் தூரம் வரையான பாலத்தோப்பூர் சந்திவரை பதாதைகளையும்,சுலோகங்களையும் ஏந்தியவாறு பல ஆயிரகணக்கானோர் சென்றனர்.

மேற்பட்ட ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ 15 திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் .

சிறுமிகள் மீதான பாலியல் துண்புறுத்தல்களை கண்டிக்கின்றோம்,முஸ்லிம்கள் மீதான பழி சுமத்தலுக்கும்,காடைத்தனத்திக்கும் எதிராக அணி திரள்வோம் என மும்மொழிகளிலும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது களங்கம் எற்படுத்த முனைகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினார்கள் சுமத்தாதே சுமத்தாத வீண்பழி சுமத்தாதே, முஸ்லிம் சமூகத்தின் மீது களங்கம் ஏற்படுத்தாதே குற்றவாழிகளை தண்டி, அப்பாவிகளை அவமானப்படுத்தாதே நீதிமன்றமே நீதியை நிலை நாட்டு அப்பாவிகளை உடன் விடுதலை செய், இதுபோன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினார்கள்.

இதற்கு ஆதரவு செலுத்தும் விதமாக தோப்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், கடைகள் வர்த்தக நிலையங்கள் வங்கிகள் என்பன இயங்கவில்லை மூடப்பட்டிருந்தன தோப்பூர் பிரதேசமெங்கும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன, வங்கிகள் அரச அலுவலகங்கள் என்பனவும் அங்கு இயங்கவில்லை போக்குவரத்துகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களையும் போட்டு எரித்தனர். இதனையடுத்து தோ ப்பூர் பிரதேசமெங்கும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2017.05.29 ஆம் திகதி மல்லிகைத்தீவு மணற்சேனை பெருவெளிப்பகுதியில் மூன்று பாடசாலைச்சிறுமிகள் சிறுவர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் அப்பகுதி தமிழ் மக்கள் அன்றய தினம் அப்பாடசாலை கட்டிட ஒப்பந்த காரர் மற்றும் கட்டிட நிர்மாணப் பணியாளர்கள் ஆகியோரை தான்றோன்றித்தனமாக சட்டத்திற்குமுரணாண வகையில் தமிழ் மக்கள் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து கட்டிவைத்துக்கொண்டு அவர்கள் மீது தாறுமாறாக தாக்கியும் அடித்தும், துன்புறுத்தீ வதைசெய்செய்திருந்தனர் .இதனால் அன்றையதினம் தோப்பூர் மற்றும் மல்லிகைத்தீவு பிரதேசங்களில் பெரும் அச்சமும் பரபரப்பம் பதற்றமும் மற்றும் களேபரம் என்பனவும் ஏற்பட்டிருந்தன . இதனால் சந்தேகத்தின்பேரில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இவ் சந்தேக நபர்களை 2017.06.05 ஆந் திகதி மூதூர் நீதிமன்றத்தில் அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டபோது, துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவர்களே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள் இவர்கள் எவரும் துன்புறுத்தல்களை தங்கள் மீது மேற்கொள்ளவில்லையென்று எனவே எமது முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசி களங்கம் ஏற்படுத்த முனைந்த காரணத்தின் பின்னணி எதுவாக இருக்குமென்றும் இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினார்கள்? .இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் திட்டமிட்டு தோப்பூர் பிரதேசத்தினை குறிவைத்து, இப்பிரதேசங்களி. மேற்கொள்ளப்படுவதில் ஏதேனும் பின்னணி இருப்பதாகவும் இவைகளால் தங்களுக்கு பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்..

மூதூர் -தோப்பூர் சிவில் சமூகம் இது விடயம் பற்றிய துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இங்குள்ள பல்லாயிக்கணக்கான முஸ்லிம் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -