ஆனால் சாய்மான கதிரைகளிலே ஒய்யாரமாக தூங்கும் நமது அரசியல்வாதிகள்...!இன்று இனவாதம் என்ற பெயரில் சிங்களபகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை குறிவைத்து தீயிட்டு எறித்து வருகின்றனர் இனவாதிகள்.இதுவரை எறியூட்டப்பட்ட சொத்துக்களின் பெருமதி பலகோடிகளைத் தாண்டும்,
இந்த பாதிப்புக்களை ஏற்படுத்தும் இனவாதிகள் கும்பலாக வருவதை தவிர்த்து, ஒன்று இரண்டு பேராக சேர்ந்து நடுநிசி வேளைகளில் இந்த நாசகார விடயங்களை செய்து விட்டு தப்பிச்செல்லுகின்றனர்.இதனை இலங்கை அரசாங்கமோ, நமது அரசியல் வாதிகளோ கண்டுகொண்டதாக தெறியவில்லை.
பாதிக்கப்படும் கடை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் உரிய நஸ்டஈட்டை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால்தான் இதன் வலி அரசாங்கத்துக்கு தெறியவரும். ஆனால் இந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் நஸ்டஈடு வழங்குவதற்கு இது வரை நடவடிக்கை எடுத்ததாக தெறியவில்லை.இதனால் அரசாங்கம் எது நடந்தாலும் தங்களுக்கு சம்பந்தமில்லை என்ற தோரணையில், கண்டும் காணாததுபோல் இந்த விடயத்தில் நடந்து கொள்கின்றார்கள்.
எவ்வளவோ விடயங்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் இலங்கை பொலிசார் இந்த விடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளபட முடியாத ஒன்றாகும்.இப்படியான இனவாதிகளுக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் விடயமானது இந்த இனவாதிகளுக்கு இவர்களும் உடந்தையாக இருக்கின்றார்கள் என்பதுதான் அர்த்தமாகும்.
இந்த நல்லரசாங்கம் முற்றுமுழுதாக இனவாதிகளின் பக்கம்தான் உள்ளார்கள் என்பது தெளிவாகி வருக்கின்றது.இப்படியான இனவாத தீ வைப்பு விடயங்களிலும், ஞானசார கைது விடயத்திலும் பச்சையாக இலங்கை அரசாங்கம் ஒன்றும் தெறியாத வபா மாதிரி நாடகமாடுவதை பார்த்தால், இந்த நூற்றாண்டின் மாபெரிய ஜோக் என்றுதான் கூறவேண்டியுள்ளது.
ஆகவே முஸ்லிம் சமூகம் ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளவேண்டும், இப்படியான முழுப்பூசணிக்காயை ஒருபிடி சோற்றில் மறைப்பது போன்று அரசாங்கம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் குறிவைத்து தாக்கப்படுவதை அறியாதவர்கள் போல் இருப்பது நல்ல ஆரோக்கியமான விடயமாக இருக்கமுடியாது என்பதை.எதிர்வரும் காலங்களில் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காது விட்டால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கண்டவன் நின்றவன் எல்லாம் சூரையாட துவங்குவான். அல்லது தீ வைக்க முற்படுவான், இந்த விடயம் ஆரோக்கியமானது அல்ல.
நமது அரசியல்வாதிகள் இந்த விடயங்களின் பாரதூரத்தை அறிந்து, காலதாமதப்படுத்தாமல் உடனே கலத்திலே இறங்கி நடவடிக்கை எடுக்காது விட்டால் நிலைமை இன்னும் மிக மோசமாக மாறும் என்பதை நாம் யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது.ஆகவே எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று பட்டு செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். அதை விட்டுவிட்டு அரசியல் கால்புணர்ச்சி காரணமாக நீங்கள் எல்லோரும் பிரிந்து நின்று உங்களுடைய சுயலாபங்களுக்காக காய் நகர்த்துவீர்களேயானால், உங்களைப்போன்ற சமூகத் துரோகிகள் யாரும் இல்லை என்றே கூறவேண்டும்.இன்று முஸ்லிம் சமூகத்தின் நிலை வேலியில்லா பயிரைப் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.பயிரை பாதுகாக்கவேண்டிய வேலியே சோரம் போய் கிடக்கும் போது பயிரின் நிலை பரிதாபத்துக்குறியதுதான் என்பதே உண்மையாகும்.
இறுதியாக எங்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு என்னவென்றால், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபடுவதுதான்.அதற்காக இறைவனை நம்புங்கள் என்று கூறி பயிலை மூடிவிடாதீர்கள்..!
நாம் முயற்சித்தால்தான் இறைவனும் உதவி செய்வான், நாம் முயற்சிசிக்காமல் இறைவன் உதவி வரப்போவதில்லை, ஓட்டகத்தை கட்டிப்போட்டு விட்டுத்தான் இறைவனிடம் நாம் ஒட்டகத்தை பாதுகாரு இறைவா என்று உதவி கேட்க வேண்டும்.மாறாக உன்னுடைய இஷ்டத்துக்கு ஒட்டகத்தை எங்கேயோ விட்டு விட்டு உதவி கேட்டால் கிடைக்குமா...?
அதே போன்றுதான், நமக்கு நமது அரசியல்வாதிகள் அரசாங்கத்திடமிருந்து உரிய பாதுகாப்பை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும், இல்லாது விட்டால் இறைவனும் எம்மை சபித்துவிடுவான்.
என்பதே உண்மையாகும்...
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.