ஹம்ஸா கலீல்-
பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று (29) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரும் கடற்றொழில் நீரியல்வள மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர ரிதிதென்னை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவர் கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் விஷேட அழைப்பில் பல்கலைக்கழக கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர் மகிந்த அமரவீர கல்லூரியின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார்.
இதன் போது பல்கலைக்கழக கல்லூரிக்கான சகல உதவிகளையும் தனது அமைச்சின் ஊடாகவும் அரசாங்கத்தின் ஊடாகவும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.