அரசியல் திருடர்கள் இலக்கியத்திருட்டிலும் உள் நுளைந்துள்ளனர்- ஜுனைட் நளீமி


 ஜுனைட் நளீமி -

லங்கை முஸ்லீம் குரல் என்ற ஒரு ஒரு அரசியல் பிரசுரம் பத்திரிக்கை என்ற பெயரில் அண்மையில் கையில் கிடைத்தது. முஸ்லீம் கட்சியின் போராளி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு சமூக விளிம்பில் தூக்கியெறியப்பட்ட வை.எல்.மன்சூர் என்ற ஒருவர் இதனை முன்னின்று தொகுத்து அச்சிட்டிருக்கிறார் என்ற விடயம் பின்னர் அப்பிரசுரத்தை வாசித்தபோது அறியக்கிடைத்தது. குறித்த பிரசுரத்தின் ஆறாம் பக்கத்தில் 'கல்குடா முஸ்லீம் பிரதேச குடிசனப்பரம்பல் - தொகுப்பு வை.எல்.மன்சூர்' என அச்சிடப்பட்டிருந்தது. உண்மையில் குறித்த ஆக்கம் முற்றுமுழுதாக என்னால் 2003ம் ஆண்டிலிருந்து பல்வேறு தரப்பினரின் உதவியுடன் கோர்வை செய்யப்பட்டு நீண்ட தேடல்களின் பின்னர் 09.09.2009ம் ஆண்டு 'கல்குடா முஸ்லிம்கள் ஓர் பூர்விக வரலாற்றுக்குறிப்பு' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. கலாநிதி எச்.எம்.ஹஸ்புல்லாஹ் அவர்கள் மனமுவர்ந்து நூலுக்கான அணிந்துரையை வழங்கியிருந்தார்.

கல்குடா பிரதேசத்தில் முக்கிய ஊர்களான வாழைச்சேனை, மிராவோடை போன்ற நகர்களின் குறிப்புக்கள் தனித்தனியே நூலுருவடிவில் துவக்கி விடப்பட்டிருந்தபோதும் ஒட்டுமொத்த கல்குடா பிரதேச வரலாறு எனது முயற்சியினால் நூலுருவாக்கப்பட்டது முதல் தடவை என்பதில் பெருமிதம் அடைகின்றேன். அதன் பிரதிகள் இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கும் உற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இந்நிலையில் அடுத்தவர் காணி, சொத்து மானம் என்பவற்றை தனக்கு ஹலால் ஆக்கி கொள்ளும் சகோதரர் மன்சூர் எனது ஆக்கத்தையும் தனது ஆக்கமாக தனது பிரசுரத்தில் பதிவிட்டிருப்பது கேவலமான ஒரு விடயமுமாகும். 

 அத்தோடு எனது நூலின் ஒவ்வொரு எழுத்துக்களும் பிசகாமல் அப்படியே பிரதி பண்ணி தனது பெயரை பொறித்திருப்பது மாபெரும் இலக்கியத்திருட்டு மாத்திரமல்ல ஒரு சமூகத்தின் வரலாற்றுத்திருட்டுமாகும். ஐ.எஸ்.பி.என் 978-955-8409-25-1 என்ற இலக்கத்தில் இலங்கை தேசிய ஆவண காப்பகத்தில் எனது நூல் பதியப்பட்ட ஒரு புலமைச்சொத்தாகும். இதனை அடிப்படையாக வைத்து இவரை மீண்டும் சிறைக்குள் தள்ளிவிடமுடியும் என்பதனை அவர் தெரியாத ஒன்றாகும். அந்தளவுக்கு யோசிக்கும் ஆற்றல் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. என்றபோதும் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட இந்நூலை பூனை கண்ணை முட்டிக்கொண்டு களவில் பால்குடிப்பதுபோன்று யாரும் அறிந்திருக்கவில்லை என நினைப்பது ஒரு முட்டாள்தனமான ஒன்றாகும்.

எனவே இத்தகைய போலிப்பேர்வழிகளின் ஆக்கங்களையோ புலம்பல்களையோ எந்தவொரு ஊடகமும், சமூக வலைத்தளங்களும் பிரசுரிக்காமல் இருப்பது சமூகத்துக்கு ஆரோக்கியமான அம்சமாக அமையும். இத்தகைய போலி ஆசாமிகள் விடயத்தில் சமூகம் விழிப்படைய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -