நாவலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்குச் சொந்தமான “DONSIDE” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. நேற்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.