அமெரிக்காவின் சதியில் மாட்டிக்கொண்டு நிர்க்கதியாகி நிற்கும் முஸ்லிம் சமூகம்.....!

மெரிக்க ஏகாதிபத்யம் தங்களுடைய உலகலாவிய தகவல் தொழிநுட்பத்தை கைக்குள் வைத்துக்கொண்டு உலக முஸ்லிம் சமூகத்தின் மீது ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் இயங்கிவந்த நாடுகளை பயங்கரவாத பெயர்களை சூட்டி அந்த நாடுகளை இன்று யுத்தபூமியாக மாற்றிவிட்ட பெருமை அமெரிக்காவையே சாரும்.

ஆப்கானிஸ்தானில் உதவி செய்வதுபோல் நாடகமாடி ரஸ்யாவை விரட்டியடித்துவிட்டு, அதன் பின் அந்த மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற என்னத்தில், எங்கேயோ நடந்த குண்டுவெடிப்பை காரணம்காட்டி அந்த நாட்டின் ஆட்சியினரை துரத்தியடித்துவிட்டு இன்று அங்கே வாடியடித்து தங்கிவிட்டனர்.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாடு ரத்தவாடை வீசும் பூமியாக மாறிவருகின்றது.

அதே போன்று ஈராக் நாட்டின் மீதும் அணுவாயுதம் இருப்பதாக பொய்கூறி வேண்டுமென்றே அந்த நாட்டின் மீது யுத்தத்தை திணித்துவிட்டு அமைதியாக வாழ்ந்து வந்த அந்த நாட்டு மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டது இந்த அமெரிக்கா. 
இப்போது அந்த நாடு யுத்தபூமியாக மாற்றப்பட்டுவிட்டது, அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் மனித வேட்டைகள் நடைபெறும் நரகமாக மாறிவிட்டது.

லிபியா நாடும் அதேபோன்று திட்டமிட்டு அழிக்கப்பட்ட நாடாகும். நல்லதோ கெட்டதோ கடாபி ஆட்சியில் இருக்கும் போது அந்த நாட்டுமக்கள் பூரணசுதந்திரத்தோடும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தவர்கள், ஆனால் இன்றோ அந்தமக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

எகிப்தில் கூட இதே நிலைமைதான், சும்மாயிருந்த நாட்டில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்திவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளை உண்டுபண்ணிவிட்டு ஒன்று தெறியாத வபா போன்று அமெரிக்கா நடந்து கொள்கிறது. இப்படி பலநாடுகளை அமெரிக்காவும் அதனோடு சேர்ந்த நாடுகளும் திட்டம்போட்டு நசுக்கி வருகின்றார்கள். 
தங்களை உலக பொலிஸ்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றநாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அமைதியாக இருக்கும் நாடுகளை அமைதி கெடவைத்து விட்டு, பிற்பாடு தனக்கு ஒன்றுமே தெறியாதவர்கள் போல் ஒதுங்கிக்கொள்வார்கள்.
அதன் பிறகு அந்த நாடு ரத்தவெள்ளத்தில் மிதக்கும்.

இப்படியான சதி செயல்களை செய்துவரும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் சதி செயல்களை நமது முஸ்லிம் சமூதாயம் இனம்காணாதவரை, நமது சமூகத்துக்கு விடிவு என்பதே கேள்விக்குறிதான். இப்போது இந்த நல்லாட்சியிலும் இலங்கையில் இவர்களின் கை ஓங்கிவருவதை காணக்கூடியதாக உள்ளது. இஸ்ரவேல் நாட்டு புத்திஜீவிகளும் இலங்கையில் காலூன்றி விட்டார்கள். இனி என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்......
எம்எச்எம்இப்றாஹிம்,
கல்மனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -