ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் காத்தான்குடி கடற்கரை வீதி பணிகள் துரிதம்

ஹம்ஸா கலீல்-

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெருந்தெருக்கள் உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்) மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற உள்ளது.

இதே வேளை கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்) மிகுதி வீதி வேலைகளை மிக அவசரமாக முடிவுருத்தி கையளிக்கும் நிகழ்வில் முழுமையாக மக்கள் பாவனைக்கு உகந்தவாறு கையளிக்கப்பட வேண்டும் என்கின்ற கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைவாக, இன்று விடுமுறை தினமாக இருந்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொருளியலாளர் பத்மராஜா, தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், வேலைத்திட்டத்துக்கு பொறுப்பானவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட நடை பாதை உற்பட வாகன தரிப்பிட வசதிகளை அடையாளப்படுத்தக் கூடிய தொழிநுட்பவியலாளர்கள் (lines makers) என அனைவரும் இன்று (மெரைன் டிரைவ்) வீதிக்கு வருகை தந்து அவ்விடத்தில் இருந்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய பணிப்புரைக்கமைய சகல வாகனங்களும் கடற்கரைப் பக்கமாக தரிப்பிடம் செய்யக்கூடிய வசதிக்கு உற்பட்டவாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக மத்திய எல்லையில் இருந்து இரண்டு பக்கமும் 3.1m அகலமுடையதாக இரண்டு புறமும் இடது பக்கமாக 0.4m அகலத்திற்கும் கடற்கரை பக்கமாக வாகனங்களை நிறுத்துவதற்கென்று 2.6m அகலத்திற்கும் தரிப்பிட வசதியை அமைத்து கொடுப்பது என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த வேலைகளை மிக அவசரமாக இன்றும் நாளையும் முடிவுறுத்தி நான்கு இடங்களுக்கு பாதசாரிகள் வீதியை கடப்பதற்கான வீதி கடவையையும் மிக அவசரமாக இட்டு 28 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வீதி முழுமையாக கையளிக்கப்படவேண்டும் என்று மக்காவில் இருந்து இன்று நாடு திரும்பிய கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் அவர்களின் இணைப்புச் செயளாலர் றுஸ்வின் முஹம்மட் அவர்களும் முன்னாள் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் ரவூப் ஏ மஜீட் உற்பட ஏனைய திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்து சகல விடையங்களையும் ஆராய்ந்து மிக அவசரமாக வேலைகளை முடிப்பது என்ற தீர்மானத்திற்கு அமைவாக தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடை பெற்று வருகின்றன.

எனவே பொது மக்கள் மிக அவசரமாக வேளைகளை முடிப்பதற்கு ஒத்துழைப்பு வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -