ஹலால் சான்றிதழ் தொடர்பில் விசாரிக்கவும் - பொதுபலசேனா போர்க்கொடி

லால் சான்­றிதழ் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­டணம் அற­விட்டு அப்­ப­ணத்தை தீவி­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கி­ய­தைப்­போன்று தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கும் நிறு­வ­னமும் அற­விடும் ஹலால் சான்­றி­த­ழுக்­கான கட்­டண நிதி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பாக அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை நடத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

நேற்று மதியம் ராஜகி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் டிலன்த விதா­னகே இத்­த­க­வலை வெளி­யிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில்,

சில கம்­ப­னிகள் ஹலால் சான்­றி­த­ழுக்­காக மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை கட்­ட­ண­மாக செலுத்தி வரு­கின்­றன. இந்­நாட்டில் வாழும் 10 சத­வீ­த­மான முஸ்­லிம்­க­ளுக்­காக 90 வீத­மாக வாழும் பெரும்­பான்மை உட்­பட ஏனைய சமூ­கங்­களும் ஹலால் வரிக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.

எனவே, இந்த ஹலால் என்ற பெயரில் அற­வி­டப்­படும் நிதி எவ்­வாறு செல­வி­டப்­ப­டு­கி­றது. வரு­டாந்தம் எவ்­வ­ளவு தொகை அற­வி­டப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் குழு­வொன்­றினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஹலால் நிதி அர­சாங்­கத்­தினால் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -