ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாயிப்நகர் நல்லுர் கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் வெடிபொருட்கள் மூலம் மீன் பிடிக்கமுற்பட்ட நான்கு பேரை இன்று சம்பூர் பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து படகு அதற்குறிய இயந்திரம் டைனமைட் குச்சிகள்-28, டைனமைட் நூல் 7அடி, டெட்டனேட்டர்-9, சிலிண்டர்கள்-4 மற்றும் சவல் போன்ற பொருட்களையும் சம்பூர் பொலிஸார் கைப்பற்றினர். இவர்களில் கூனித்தீவு பிரதேசத்தில் ஒருவரும், மூதூர் பிரதேசத்தில் ஒருவரும், தாயிப்நகரில் இருவருமாக 4 பேரையும் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.


