பெரிய கடை ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல் -அன்வர் தளத்திற்கு விஜயம்



திருகோணமலை மனையாவெளி பெரியக்கடை ஜும்மா பள்ளிவாசல் இனம் தெரியாத சிலரால் (03) சனி அதிகாலை 12.30 மணியளவில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன ஐந்து மண்ணெண்ணெய் போத்தல்கள் அடங்கிய மண்ணெண்ணெய் வீச்சு இடம்பெற்றுள்ளது இதன் போது பள்ளிவாசலின் உள் பகுதியின் விரிப்புக்கள் மற்றும் உடைமைகள் என்பன சேதமடைந்துள்ளன 

குறித்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அலி உட்பட்ட நிர்வாக குழுவினரை சந்தித்து இதுவிடயமாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெறிவித்ததுடன் தொடர்ந்தும் பொலிசாரால் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார் 

இதன் பொது அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் பரசுராமணம் சம்பவ இடத்திற்க்கு வருகை தந்திருந்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -