இனநல்லிணக்கத்துக்கு எதிராக சில நபர்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் மற்றும் வியாபாரா நிறுவனங்கள் என்பவற்றின் மீது 14 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
