லைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் பொலிசாரை தாக்க முட்பட்ட வீடியோ வெளிவந்துள்ளன

பாறுக் ஷிஹான்-

யாழ் நகரில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரை துரத்திப் பிடித்த பொலிசாரைத் தாக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம்(29) இடம்பெற்றது

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸாரின் சைகையை மீறி மூவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்துள்ளனர்.

இதன் போது அவர்களை துரத்தி சென்ற பொலிஸார் விருந்தினர் விடுதிச் சந்திக்கு அண்மையில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரையும் மடக்கி பிடித்தனர்.

பிடித்த மூவரையும் பொலிஸார் கைது செய்ய சென்ற போது அம்மூவரும் பொலிசாரைத் தாக்க முயன்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிசாரைத் தாக்க முயன்றவர்களை அப்பகுதியில் நின்ற மக்கள் தடுத்து நிறுத்தி பொலிசாருடன் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இறுதியில் பொலிசாரைத் தாக்க முயன்றவர்கள் அவர்களது மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக பொலிஸார் அவ்விடம் அழைக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

மேலும் பொலிஸாரின கடமைக்கு இடையுறு மேற்கொண்ட கைது செய்யப்பட்ட நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -