மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால மக்கள் இடம் பெயர்வு





க.கிஷாந்தன்-

லையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் 29.05.2017 அன்று மாலை மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், 5 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டு ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் வழங்கி வருகின்றது.

இதேவேளை இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்ததாகவும், அதிகாரிகள் அவ்வப்போது வருகை தந்து பார்வையிட்டு செல்வதாகவும், தமக்கு எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் உடனடியாக இதற்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -