கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்



பாறுக் ஷிஹான்-

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.

இந்த கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் மாவட்ட அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த கூட்டத்திற்கு ஏனைய இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

எனினும் குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -