பொதுபல சேனாவின் வளர்ச்சியில் ஆஸாத் சாலிக்கு பாரிய பங்குண்டு..

பொதுபல சேனாவின் வளர்ச்சியில் ஆஸாத் சாலியின் குடும்பத்துக்கு பாரிய பங்குண்டு என களுத்துறை மாவட்ட பா.உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

ஆஸாத் சாலி தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் ஊடகவியளாலர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பதில் அளித்த அவர்..

ஆஸாத் சாலியின் சகோதரிக்கு பொதுபல சேனா அடைக்கலம் வழங்கியதும் அவரது சுகயீனத்துக்கு உதவுமாறு கோரியதும் யாவரும் அறிந்த விடயம்.

கீரியும் பாம்புமாக வெளியே தெரியும் அஸாத் சாலிக்கும் ஞானசாரருக்கும் மத ரீதியான வித்தியாசம் இருப்பினும் அதில் ஒருவர் தரகர் மற்றவர் இடைத்தரகராவார்.அவர்கள் இருவரும் கொந்தராத்து காறர்கள் என்பது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமையாகும்.

பொதுபல சேனாவின் வளர்ச்சிக்கு சாலி குடும்பத்துக்கும் தொடர்புள்ளது என நான் கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது என முதலில் கூறியவர்களில் முதன்மையானவர் அஸாத்சாலியின் சகோதரர். இந்த விடயத்தை டிலந்த விதானகே வெளிப்படையாக ஆதாரத்துடன் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் அஸாத் சாலியின் சகோதரிக்கு பொதுபல பல சேனாவானது அடைக்கலம் வழங்கியுள்ளது.அவரது சகோதரரிக்கு உதவுமாறு டிலந்த விதானகே பகிரங்க கோரிக்கை விடுக்கின்றார்.இஸ்லாமிய அமைப்பொன்றுக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றிய போது,அஸாத் சாலி குறித்த இஸ்லாமிய அமைப்புக்கு எதிராகவும் ஞானசார தேரருக்கு ஆதரவாகவும் வழக்கறிஞர்களை அனுப்பியிருந்தார்.இவற்றுக்கு பின்னால் உள்ள மர்மம் என்ன?

ஞானசார தேரரை எவரும் கண்டுகொள்ளாத வேளையில் அவரை விமர்சித்து அவருக்கு விளம்பரம் கொடுத்து அவரை பிரபல்லியம் ஆக்கியதில் ஆஸாத் சாலி பிரதானமானவர். இருந்த போதிலும் அவருடன் பொது பல சேனா நெருக்கமாகவே உள்ளது. அவர்களை பிரபலமாக்கவே இவர் அவர்களை விமர்சித்திருக்கலாம் .மஹிந்த காலத்தில் ஞானசாரரை கைது செய்யவில்லை என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர், பள்ளிக்கு கற்கள் எறியப்பட்ட போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர், இன்று பள்ளிவாயல்களுக்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் போது அவரது சுய இ லாபத்துக்காக மைதிரியிக்கு வக்காலத்து வாங்கி வருகிறார்.

அஸாத் சாலி ஞானசார தேரர் போன்றவர்களை பற்றி பேசுவதை விட பேசாமல் இருப்பதே சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -