பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(30) குறித்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது தற்போது இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இன்றைய தினம் 12 மணியளவில் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் குறித்த கூட்டத்தை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களுள் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்தார்.
மேலும் இம்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏனைய இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை .