மலைநாட்டு புதியகிராமங்கள் அமைச்சினை நான் பொறுப்பேற்றபின்னர் அரசியல், தொழிற்சங்கபேதமின்றி பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். குறிப்பாக மண்சரிவு, தீபாயத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடமைப்புத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஆனாலும், இதனை சிலர் நான் கட்சி ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் முன்னெடுப்பதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து அரசியல் இலாபம் அடையமுனைகின்றனர். அவர்கள் அதற்குரிய பிரதிபயனை அடைய நேரிடும் என மலைநாட்டு புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் தீயினால் பாதிப்புற்ற இருபத்தைந்து தொழிலாளர் குடும்பத்திற்கு புதிய கிராமத்தினை அமைத்து கையளிக்கும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ஜி. நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஸ்ரீதரன், சரஸ்வதிசிவகுரு.
சிங்.பொன்னையா,எம்.உதயகுமார், இரா.இராஜாராம், ஆர்.ராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன தலைவர் வி.புத்திரசிகாமணி,தொழிலாளர் தேசியசங்கத்தின் செயலாளர் எஸ்.பிலிப் உள்ளிட்டமுக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் திகாம்பரம் மேற்படி கருத்தினை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
புரன்ஸ்விக் வீடமைப்பு திட்டம் என்பது தீயினால் எரியுண்டலயத்தில் வாழ்ந்த அதனோடு இணைந்ததாகதற்காலிக குடியிருப்பிலும் வாழ்ந்த 25 குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டது. அவர்களுக்கு உறவினர்கள் இருக்கலாம், அவர்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம், இப்போது வீடமைப்பு திட்டம் நிறைவு பெறும்வேளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு வீடுகளை கேட்பது நியாயமானது இல்லை. அதுவும் அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு சில கட்சிகளால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
பிரன்ஸ்வீக் வீடமைப்பு திறப்பு விழாவின்போது இத்தகைய குழப்பம் ஒன்றை ஏற்படுத்த ஒரு ஊடத்துடன் இணைந்து ஒரு அரசியல் கட்சிசெய்தகபட நாடகம் கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளது. குறித்த ஊடகமும்,குறித்த கட்சியும் ஏற்கனவே திட்டமிட்டு அரசியல் நிகழ்ச்சிகள் செய்தமையை மக்கள் அறிவீர்கள். இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைக்கான மேற்கொண்டுமக்களை ஏமாற்ற நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் அவர்கள் பிரதிபலனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.