அப்துல்சலாம் யாசீம்-
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் மத்திய நிலையம் இன்று (30) திறந்து வைக்கப்பட்டதுடன் குறித்த செய்தியை அறிந்த பொது மக்கள் உட்பட நலன்விரும்பிகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களால் முடியுமான உலர் உணவுப்பொருட்களை வழங்கி கொண்டிருப்பதாகவும் குறித்த பொருட்கள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிகப்பதற்காக நாளை காலை காலி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புகின்றவர்கள் குடி நீர் போத்தல்கள்இபுதிய ஆடைகள்இபால் மா பைக்கற்றுகள்இஅரிசிஇபருப்பு உட்பட உலர் உணவுப்பொருட்களை நாளை காலை 6 மணிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.