ஜனாதிபதியும், பிரதமரும் இனவாதிகளின் இயக்குனர்களா..?

ன்று பொது பல சேனா போன்ற இனவாதிகள் முஸ்லிம்களுக்கும், அவர்களுடை சொத்துக்களுக்கும் சேதத்தை உண்டுபண்ணியபோது, அதனை தனது அதிகாரத்தைக்கொண்டு அடக்காத நாட்டின் சகல அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ மீது கடும் குற்றச்சாட்டுக்களை நாம் முன் வைத்தது மட்டுமல்ல, பழிதீர்க்கும் நோக்கோடு கடந்த தேர்தலில் அவரை தோக்கடித்தும் இருந்தோம்.

இந்த நடவடிக்கை அந்த நேரம் சரியாகபட்டது, ஏனென்றால் மஹிந்த நினைத்திருந்தால் அதனை அடக்க கூடிய அதிகாரத்தில் இருந்தார் என்பதனாலாகும். 

இன்றய நல்லாட்சியை கொண்டுவர முயற்சித்த நமது அரசியல்வாதிகள் இன்று பொதுபலசேனா போன்ற இனவாதிகளால் நடக்கும் அநியாயத்தை, இந்த நல்லாட்சியில் சகல அதிகாரங்களும் பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களிடம் கொண்டுசென்று பிரச்சினைக்கு தீர்வை பெற முயற்சிக்காமல் பொலிஸ் நிலையம் சென்று எங்களை காப்பாத்துங்கோ என்று தவம்கிடப்பது நகைப்புக்குறிய விடமயமாக தெறிகின்றது.

இந்த நல்லாட்சியை கொண்டுவரும்போது, எங்கள் ஆட்சி வந்தால் இனவாதிகளின் கொட்டம் அடக்கப்படும் என்று கூறியவர்கள்தான் இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றும் தெறியாத வபாக்கள் போன்றும் அவர்களிடம் கூறி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதைவிட்டு விட்டு, பொலிசாரிடம் போய் முறையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்பதானது" கையிலே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்தேடி அழைந்தபாவி" என்ற பல மொழியை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது.

ஆகவே நல்லாட்சியை கொண்டுவர பாடுபட்டவர்கள், நாங்களும் முஸ்லிம் சமூகத்துக்காக பேசுகின்றோம் என்று நாடகமாடுவதற்காக இந்த பொலிஸ் முறைப்பாடு என்ற நாடகத்தை ஆடுகின்றார்கள். இவர்களுக்கு தைரியம் இருக்குமாக இருந்தால் ஜனாதிபதியிடமோ, பிரதமரிடமோ நேரடியாக பேசி உடனடியாக பலனைக் காணக்கூடிய சந்தர்ப்பமிருந்தும் அவர்களிடம் போகாமல் வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கின்ற விடயமானது நமது சமூக பிரதிநிதிகள் ஆட்சியாளர்களிடம் சோரம் போகும் விடயமாகும் என்பதே நிதர்சனமாகும்.

அவர்களிடம் நமது முஸ்லிம் உறுப்பினர்கள் செல்லாமல் பின்வாங்குவதன் நோக்கம் மிகத்தெளிவானதாகும். ஜனாதிபதியும், பிரதமரும் இனவாதிகளின் இயக்குனர்கள் என்பது அவர்களுக்கு தெறிந்துவிட்டது, இந்த நிலையில் அவர்களிடம் போய் அவமானப் படுவதைவிடவும், அவர்களை காட்டிக்கொடுத்து நமது பதவியை இழப்பதைவிடவும், பேசாமல் நாடகமாடி முஸ்லிம்களை ஏமாற்றுவதே மேல் என்ற முடிவுக்கு நமது சிங்கங்கள் வந்துள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

இனிமேலும் நமது அசிங்கங்களை நம்பி நமது சமூகம் இருக்குமேயானால் இனவாத நரிக்கூட்டங்கள் எம்மை பந்தாடிவிடும் என்பதே எங்கள் கருத்தாகும்.

தாங்கள் கொண்டுவந்த நல்லாட்சியின் ஜனாதிபதியையும், பிரதமரையும் நேரடியாக குற்றம்சாட்டி நிற்பதை விட, அவர்களை சமூகத்திடம் மஹிந்தவை காட்டிக்கொடுத்து பழிதீர்த்ததைபோல் இவர்களையும் காட்டிக்கொடுக்க விருப்பமில்லாமல் மிகவும் திண்டாடுவதை கண்டால் சிரிப்புத்தான் வருகின்றது.

ஆகவே முஸ்லிம் சமூகம் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? என்று அறிந்து கொண்டுவிடுவார்களேயானால், இவர்களுடைய பொய் நாடகத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கலாம், அல்லாது விட்டால் "பழய குருடி கதவை திறடி" என்ற சீலம்தான் நமது சமூகத்தின் நிலையுமாகும் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -