வெள்ளவத்தை பகுதியில் உடைந்து வீழ்ந்த கட்டடத்திற்கு கொழும்பு மாநகர சபையிடம் எந்தவித அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கட்டடத்திற்கு அருகிலுள்ள கட்டடத்திற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஓடையை அண்மித்து தமது நிறுவனத்தினால் அனுமதி வழங்கவில்லை எனவும், தமது அனுமதியை மீறி இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
