திருகோணமலை நகர்பகுதியில் 01 கிலோ 450 கிரேம் கேரளா கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (30) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
திருகோணமலை.சமுத்ரா கம பகுதியைச்சேர்ந்த தொன் பிரேம சந்திரவிக்ரம நாயக்க காமினி (52வயது) என்பரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருவாடு கடை நடாத்திக்கொண்டிருப்பதுடன் கஞ்சா போதைப்பொருளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் தலைமைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுறறிவளைப்பை மேற்கொண்ட போதே இச்சந்தேக நபரிடமிருந்து 1கிலோ 450 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இச்சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 07 வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.