நீங்கள் வாக்களித்து அதிகாரம் வழங்கிய தலைவர்கள் உங்களை சூடாக்கி வீதிக்கிறக்கவும் அதிகாரம் நிறைந்த ஜனாதிபதி, பிரதமர், இருக்கத்தக்கதாக பொலீஸ் மா அதிபரை சந்தித்து நாடகமாடுவதையும் மக்களை ஏமாற்றும் இரண்டாம் அரங்கு இந்த ஞானசாரவை வைத்து அதை உருவாக்கியவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சிங்கள பெளத்த மக்களின் ஏக தலைவனல்ல ஞானசார. அவர் ஒரு சர்வதேசத்தின் திட்டத்தை நாட்டில் நடைமுறை படுத்திய கூலி. அவரை கருத்தில் கொண்டு முழு தேசமும் சிங்கள பெளத்த மக்களோடு இனமுரன்பாடு காண முடியாது. எனவே தேசிய காங்கிரஸின் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான அணி இன்று மல்வத்தை மகாநாயக தேரரை கண்டியிலே சந்திக்கிறது.
இதன் போது,
சிங்கள சமுகத்தில் இருந்து முஸ்லீம்களை தூரப்படுத்தும் தந்திரம் இதன பிண்னணி, இது எதற்காக என சிங்கள தலைவர்களை தெளிவுபடுத்துவதே ஆகும். ஞானசார போன்றவர்களின் முகத்திரை சிங்கள மக்களிடையே தோலுரிக்கப்பட வேண்டும். முஸ்லீம்களை சூடாக்கி வீர வசனம் பேசுவது இந்த காலப்பகுதியில் ஞானசாரவின் திட்டத்தை நிறைவேற்றுவது போலாகும்.
