ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிக்கு உணவுப்பொதியினுள் பற்பசை பக்கற்றிற்குள் வைத்து 100மில்லிகிராம் ஹெரோயினை (5 பொதிகள்) கொடுக்க முற்பட்ட திருகோணமலை நகரில் வசிக்கும் 20 வயது இளைஞனை துறைமுக பொலிஸார் நேற்று கைது செய்தனர். தமக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் ஆட்டோ ஓட்டுனரும் தமக்கு அறிமுகமான ஒருவரே பார்சல் ஒன்றைக்கொடுத்தனுப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்ததையடுத்து உப்புவெளியில் வசிக்கும் இக்கடத்தலுக்கான பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யும் நடவடிக்கையில் துறைமுக பொலிஸார் முன்னெடுக்கினறனர்.
