தேசிய ரீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரவேற்பினைப் பெற்றுள்ளது- அமீர் அலி

எச்.எம்.எம்.பர்ஸான்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க வேண்டுமென்ற முனைப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைப்புரிந்து கொண்ட நம்முடைய மக்கள் தேசியத்தில் பல பிரதேசங்களிலுமிருந்து அவசர அவசரமாக மக்கள் காங்கிரஸிக்கு அழைப்பினை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம் காங்கிரஸின் இதயம் என்று சொல்லக்கூடிய அம்பாரை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு மக்கள் காங்கிரஸ் எதுவித சேவைகளும் செய்யாமல் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சுமார் முப்பத்தி நாலாயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளதென்பது இதற்கு எடுத்துக்காட்டாகவுள்ளது.

அதே போல், குருநாகல், அனுராதபுரம், புத்தளம் எனப்பல பிரதேசங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, இக்கட்சியை நிறுவன மயப்படுத்தி எதிர்காலத்தில் பல்வேறு வகையான திட்டங்களை மக்களின் நலன்களுக்காக முன்னெடுப்பெதன கட்சி தீர்மானித்துள்ளது என 26ம் திகதி மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
பிரதியமைச்சர் தொடர்ந்தும் பேசுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சொந்தக்காரர்கள் எனும் அந்தஸ்தை மக்களுக்கு இக்கட்சி வழங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது மாற்றுக்கட்சியிலுள்ள சகோதரர்கள் நாளாந்தம் எம்மோடு இணைந்து கொண்டே இருக்கிறார்கள் என பிரதியமைச்சர் அமீர் அலி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -