கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை அமர்வு 2017.04.25 நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனால் முன்வைக்கப்பட்ட இறக்காமம், சிலை தொடர்பாகவும், காணி அபகரிப்பு தொடர்பாகவும்”பிரேரணையின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுல பெணாண்டோ இவ்விதாதத்தை சபையில் எடுக்க முடியாது என கோரினார்
இதனைத்தொடர்ந்து அங்கு எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது. அப்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்களினால் குறித்த சம்பவம் தொடர்பாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சபையில் ஆரிப் சம்சுடீனால் பிரேரணை எடுக்கப்பட்டது அதன் போது தொடர்ந்தேர்ச்சியாக சில கேள்விகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுல பெணாண்டோ தொடர்த்தார்.
மேலும், அங்கு காணி அமைச்சர் ஆரியபதி கலபதி பதலளிக்காமல் சபையை விட்டு பிரேரணைக்கு பதில் வழங்காமல் வெளியேறினார்