காரைதீவில் 6 நாட்களாக சத்தியாக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை இன்று சனிக்கிழமை (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமரை சந்தித்து பேசுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவர் பிரதமரை சந்தித்து பேசியபின், உடனடியாக நிரப்பக்கூடிய வெற்றிடங்களை சிபார்சு செய்வதற்காக பிரதமரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக்குழுவின் அறிக்கையின் பின்னர், அதற்குள்ள வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான முற்சிகளை மேற்கொள்வோம் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.