முஹஸ்ஸின்-
பிரித்தானிய 'எடின்பரோ கோமகன்' சர்வதேச தங்க விருதுக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிசான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை (06) அலரி மாளிகையில் நடைபெறவுள்ள 'எடின்பரோ கோமகன்' சர்வதேச விருது வழங்கும் விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
இளைஞர் ஆளுமை, ஆற்றல், சிறந்த தலைமைத்துவம், சர்வதேச தொடர்புகள் மற்றும் வெளிக்கள ஆய்வுகள் போன்ற துறைகளில் அதிதேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது திட்டத்தில் கிழக்கு மாகாண வரலாற்றில் முதன் முறையாக தங்க விருது பெறும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.
'எடின்பரோ கோமகன்' சர்வதேச வெண்கல விருதை 2008ஆம் ஆண்டிலும் வெள்ளி விருதை 2014ஆம் ஆண்டிலும் பெற்றுக்கொண்ட இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு பீடத்தில் மனித உரிமைத்துறையில் உயர்கல்வி கற்று வருவதுடன் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
