ஆசிரியர் ஜெஸ்மி மூஸாவின் ”முகநூல் முகவரிகள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா..!

ருதமுனை ஜெஸ்மி எம் மூஸாவினால் தொகுக்கப்பட்ட முகநூல் முகவரிகள் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா (நாளை) 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு மருதமுனை கலாசார மண்டபத்தில் ஜெஸ்மி மூஸா தலைமையில் இடம்பெறவுள்ளது.

மருதமுனையில் இருந்து முகநூலில் கவிதைகளை எழுதிய எம்.எச்.ஏ.கரீம், மருதமுனை விஜிலி, முபாரக் இஸ்மாயில், டீன் கபூர் ,சேகு இஸ்மாயில், நீலாவணையூர் அல்ஜ், முகமட்ட றாபி ,தாஜுத்தின் கனீபா, பாஸித் மருதான், பஸீர் ஜமால்தீன், அபூ நூர், கத்தார் ஹாஜி, நெய்தலூர் நிஸ்பார், நாவாஸ் அமீர், முஜீப்ரஹ்மான், றிலா மர்சூக், தமீம், நஜாஜ் மன்சூர், இளங்குயில் இம்தியாஸ், நியாஸ் ஐயூப், முகமட் பாரீஸ், ஜெஸ்மி மூஸா ஆகிய 22 கவிஞர்களின் 62; கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 

இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்ராகிம் முன்னிலையில் உமாவரதராஜன், கலாநிதி சத்தார் பிர்தௌஸ் ஆகியோர் நூல் பற்றி பேசவுள்ளதுடன் முதல் பிரதியை கவிஞர் சறோ தாஜுத்தின் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூல் வரலாற்றில் ஒரே இடத்தைச் சேர்ந்த கவிஞர்களின் தொகுதியாக வரும் முதலாவது நூல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -