தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று நாளை 5 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு அட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.
> தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த விசேடக்கூட்டம் இடம் பெறவுள்ளது.
> இந்தக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , சரஸ்வதி சிவகுரு உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் , அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , தோட்டக்கமிட்டித் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எஸ்.பிலிப் மேலும் தெரிவித்தார்.
