அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் நேற்று (01) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை. மனையாவெளி பகுதியைச்சேர்ந்த 47வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருதய நோயாளியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது தலைமையக பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனை செய்த வேளை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 10ம்திகதி வரை விளக்கமறியலில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.