மகளிர் மற்றும் சிறுவர்களின் முன்னேற்றம் குறித்து கருத்தில் கொள்ளப்படும் - பைஸர் முஸ்தபா

மினுவாங்கொடை நிருபர்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பணிப்புரைக்கமைய, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இந்தியா பயணமாகியுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா,  இந்திய அரசின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் மேனகா காந்தியைச் சந்தித்து, இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். 

இப் பேச்சுவார்த்தை, அமைச்சர் மேனகா காந்தியின் அமைச்சு அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் போது, இரு அமைச்சர்களுக்கு மத்தியிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், அவர்களது பாதுகாப்பு முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. விசேடமாக, மகளிர் மற்றும் பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பு அமைச்சர்கள் மத்தியிலும் கலந்துரையாடப்பட்டன.

இதுதவிர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற கால் நடைகள் மற்றும் நலன்புரி வேலைத் திட்டம் தொடர்பி லும் விசேட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன. கால் நடைகள் மற்றும் நலன்புரி விடயத்தில் விசேட கவனம் எடுத்து வரும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம், அமைச்சர் மேனகா, இது குறித்தும் தனது விரிவான கருத்துக்களை இதன்போது முன் வைத்துள்ளார். 

கால் நடைகளுக்கான பாதுகாப்பு, அவற்றின் பராமரிப்பு, அவற்றை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியுதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த ஆலோசணைகளும் இக் கலந்துரையாடலின்போது முன் வைக்கப்பட்டுள்ளன. 

இறுதியில், அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு இடையில், இலங்கை - இந்திய நட்புறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கையில் தற்போது நிலவும் நல்லாட்சியுடன் இந்தியா தொடர்ந்தும் தனது நல்லெண்ணங்களை வலுப்படுத்திக் கொள்ளும் என்று, இதன்போது அமைச்சர் மேனகா காந்தி, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் உறுதியளித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -