யாழில் வாள் வெட்டில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரின் சொகுசு கார் மீட்பு



பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் முக்கிய நபர் ஒருவரது அடையாளப்படுத்தப்பட்ட சொகுசு கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் அண்மைக்காலங்களில் இப்பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டுக்களில் முக்கிய சந்தேக நபராக விளங்குகின்றார்.

கொக்குவில் பகுதியில் உள்ள பூசகர் ஒருவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 65 இலட்சம் விலை மதிக்கத்தக்க அவூடி(AUDI) ரக குறித்த காரை பூசகரது வீட்டில் மறைத்து வைத்து விட்டு சந்தேக நபர் தலைமறைவு ஆகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தற்போது மீட்கப்பட்ட கார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -