திருடப்பட்ட சைக்கிளுடன் இளைஞன் கைது -ஏறாவூர் பகுதியில் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பொதுச் சந்தையில் சைக்கிளைத் திருடிச் சென்றதான முறைப்பாட்டின் அடிப்படையில் சிசிரீசி காணொளிக் கமெராவின் உதவியுடன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு சைக்கிளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 26.02.2017 இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவதுளூ

பொதுச் சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை சந்தேக நபரான 21 வயதுடைய இளைஞன் திருடிச் சென்றுள்ளான்.

சம்பவம் இடம்பெற்றதை அறிந்தவுடன் உடனடியாக அப்பகுதிக் கடைகளிலிருந்த காணொளிக் கமெரா பரிசோதிக்கப்பட்ட வேளையில் சந்தேக நபர் சைக்கிளைத் திருடிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருடப்பட்ட சைக்கிள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோடு மறைந்திருந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி எறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -