எந்தவொரு இனத்திற்கும் இநீதி இழைக்கமாட்டேன்-பைசர்முஸ்தபா

காரைதீவு நிருபர் சகா-
புதிதாக உள்ளுராட்சிசபைகளை உருவாக்கும்போது எந்தவொரு இனத்திற்கும் அநீதி அழைக்கப்படமாட்டாது. கிழக்கு மாகாணத்தில் எனக்கு எந்த அரசியல்லாபம் கருதியும் எதனையும் செய்யவேண்டிய தேவையில்லை. எந்த வேலைத்திட்டமானாலும் மக்களின் விருப்பு வெறுப்பு அறிந்தே செயற்படுவேன்.

இவ்வாறு தன்னைச்சந்தித்த தூதுக்குழுவினரிடம் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்தார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கும் கல்முனைத்தமிழர் பிரதிநிதிகளுக்குமிடையிலான ஆக்கபூர்வமான சந்திப்பு நேற்றுமுன்தினம் அமைச்சரின் அலுவலகத்தில் சிநேகபூர்வமாக நடைபெற்றது.
குழுக்களின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோ உபதலைவர் ஹென்றிமகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது.

கல்முனைத்தமிழர்கள் சார்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; மூத்தஉறுப்பினரும் கல்முனை மாகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் முன்னாள் மாகரசபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் முன்னாள் கோட்டக்கல்விபணிப்பணிப்பாளர் ஆ.வினாயகம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு தூதுக்குழுவினர் அமைச்சரிடம் மகஜரைச் சமர்ப்பித்து பின்வரும் விடயங்களை எடுத்துரைத்தனர்.
கல்முனை மாகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது கல்முனை தமிழ் கல்முனை முஸ்லிம் பிரதேசங்களை 4ஆக பிரித்து தனித்தனி உள்ளுராட்சிசபைகளை அமைக்கவுள்ளதாக அறிகின்றோம்.

இதற்கு நாம் எமது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றோம். சாய்ந்தமருதுப்பிரதேசத்திற்கு தனியான பிரதேசசபை அமைவது முஸ்லிம் சகோதர்களின்; நீ;ண்டகால கோரிக்கையாகும்.அது அவர்களது உரிமையும்கூட. அங்கு ஒரு பிரதேசசபை அமைவதை நாம் ஆட்சேபிக்கவில்லை. நாம் அதற்கு ஆதரவாகஇருப்போம்.
ஆனால் ஏனைய 3 சபைகள் பிரிவதை நாம் ஆட்சேபிக்கின்றோம். கல்முனை மாகநகரசபைக்குள்தான் இப்பிரதேசத்துள்வரும் அனைத்து தமிழக்கிராமங்களும் இருக்கவேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும்.

தூதுக்குழுவிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பதில்!

நீங்கள் கொழும்புவந்து இந்தப்பிரச்சினையைக் எழுத்துமூலம் தெரிவித்துள்ளீர்கள்.கவலையாகவிருக்கிறது. நிச்சயம் எந்தவொலு தீர்வானாலும் செயற்பாடானாலும் நான் எந்த இனமும் பாதியாதவகையில்தான் செயற்படுவேன். உரியய மக்களுடன் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உரிய தீர்வு காண்பேன்.நீங்கள் கவலைப்படவேண்டாம். ஒருபக்கச்சார்பாக ஒருபோதும் செயற்படமாட்டேன்.
கல்முனை உள்ளுராட்சி சபை விவகாரம் தொடர்பில் நான் விரைவில் அங்கள்ள மூவின மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களைச்சந்தித்து முடிவெடுப்பேன்.

கிழக்கு மாகாணத்தில் எனக்கு எந்தவேலையையும் அரசியல் லாபம் கருதி செய்யவேண்டிய தேவையில்லை.நான் ஒருபோதும் தமிழ்மக்களை வெறுத்து அல்லது புறக்கணித்து எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கமாட்டேன்.

மக்களுக்காக சேவை செய்யவே நானுள்ளேன். மக்கள் விருப்புவெறுப்பு அறிந்தே அவர்களது விருப்புவெறுப்பக்கிணங்கவே எதனையும் செய்வென். யாரும் பயப்படவேண்டிய தேவையில்லை. அநீதி இடம்பெறாது.
கல்முனை மாகரில் தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும் சந்தோசமாக ஒற்றுமையாக வாழவேண்டும்.

ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு எதனையும்செய்துவிடமுடியாது. என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -